
2019 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் மகேந்திர சிங் தோனியை ராக்கெட் த்ரோ மூலம் வெளியேற்றிய நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நியூசிலாந்து அணியில் இருந்து ஓரங்கப்பட்ட மார்ட்டின் கப்தில், டி20 லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வந்தார். அதன்படி, அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்காக விலையாடியனார். அதன்பின் கப்திலுக்கு பதிலாக ஃபின் ஆலான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டதை அடுத்து கப்திலுக்கான வாய்ப்பும் முடிவடைந்தது.
தற்போது 38வயதாகும் மார்ட்டின் கப்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்டு பேசிய கப்தில், “சிறுவயதில் நியூசிலாந்திற்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது, மேலும் எனது நாட்டிற்காக 367 சர்வதேச போட்டிகளில் விளையாடியதை நம்பமுடியாத அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். ஒரு பெரிய குழுவினருடன் வெள்ளி ஃபெர்ன் அணிந்த நினைவுகளை நான் எப்போதும் போற்றுவேன்.