
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன், 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 94 ரன்களைச் சேர்த்த கையொடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்டு மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களில் ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஹசன் நவாஸ் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 10 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 105 ரன்களைச் சேர்த்தார்.