நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டுனெடினில் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணியும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டுனெடினில் நடைபெறுகிறது. இரு அணியும் சமபலத்துடன் மோதும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs வங்கதேசம்
- இடம் - ஓவல் பல்கலைக்கழகம், டுனெடின்
- நேரம் - அதிகாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
நேரலை
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் நேரலையை அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 42
- நியூசிலாந்து - 31
- வங்கதேசம் - 10
- முடிவில்லை - 01
பிட்ச் ரிப்போர்ட்
ஓவல் பல்கலைக்கழக மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 11 ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 6 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானம் என்பதால் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.
உத்தேச லெவன்
நியூசிலாந்து: ஃபின் ஆலன், வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (கே), ஹென்றி நிக்கோல்ஸ், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஆடம் மில்னே, கைல் ஜேமிசன், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி
வங்கதேசம்: தன்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், சௌமியா சர்க்கார், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: முஷ்பிகுர் ரஹீம், டாம் லதாம்
- பேட்டர்ஸ்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், ஃபின் ஆலன்
- ஆல்-ரவுண்டர்: ரச்சின் ரவீந்திரா (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), சௌமியா சர்க்கார்
- பந்துவீச்சாளர்கள்: கைல் ஜேமிசன், இஷ் சோதி
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now