-mdl.jpg)
நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான டி20 தொடர் நாளை தொடங்குகிறது.
இதில் முதலாவது டி 20 ஆட்டம் நேப்பியரில் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க வங்கதேச அணி கடுமையாக முயற்சிக்கும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேசமயம் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன் ஆகியோர் விலகியுள்ளதால் பின்னடைவை சந்தித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs வங்கதேசம்
- இடம் - மெக்லீன் பார்க், நேப்பியர்
- நேரம் - காலை 11.40 மணி (இந்திய நேரப்படி)