
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மவுண்ட் மௌங்கனுய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் வங்கதேச அணி முதல் முறையாக நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs வங்கதேசம்
- இடம் - பே ஓவல், மவுண்ட் மௌங்கனுய்
- நேரம் - அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)