Advertisement

NZ vs ENG, 1st Test: மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட்; தோல்வியின் விழிம்பில் நியூசிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 18, 2023 • 16:04 PM
NZ vs ENG, 1st Test: A dominant day for the visitors as they have victory in sight!
NZ vs ENG, 1st Test: A dominant day for the visitors as they have victory in sight! (Image Source: Google)
Advertisement

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி  ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக ஆடி 84 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டர் அபாரமாக பேட்டிங் விளையாடிய ஹாரி ப்ரூக் 89 ரன்கள் அடித்தார். ஒல்லி போப் 42 ரன்களும், பென் ஃபோக்ஸ் 38 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 325 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியில் டாம் பிளண்டெல் மற்றும் தொடக்க வீரர் டெவான் கான்வே ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். அபாரமாக ஆடிய டாம் பிளண்டெல் சதமடித்தார். பிளண்டெல் 138 ரன்களையும், டெவான் கான்வே 77 ரன்களையும் குவிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்கள் அடித்தது.

Trending


பின்னர் 19 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில் அனைத்து வீரர்களுமே பங்களிப்பு செய்தனர். ஜோ ரூட் (57), ஹாரி ப்ரூக்(54) மற்றும் பென் ஃபோக்ஸ்(51) ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். அவர்களுடன் ஒல்லி போப்(49), ராபின்சன்(39) ஆகியோரும் பங்களிப்பு செய்ய, 2ஆவது இன்னிங்ஸில் 374 ரன்களை குவித்தது இங்கிலாந்து.

மொத்தமாக 393 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற, 394 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனால்  இன்னிங்ஸில் விரட்டிவரும் நியூசிலாந்து அணி்யின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பினர். அதிலும் டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ், டாம் பிளெண்டல் என வரிசையாக சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் அந்த அணி  வெறும் 28 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் வேகத்தில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. 

இதனால் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் அடித்துள்ளது. இதில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர் பிராட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 331 ரன்கள் தேவை. ஆனால் இங்கிலாந்து அணிக்கு வெறும் 5 விக்கெட் மட்டுமே தேவை என்பதால் இங்கிலாந்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement