Advertisement

NZ vs ENG 2nd Test, Day 2: கான்வே, வில் யங் அசத்தல்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.

Advertisement
NZ vs ENG 2nd Test, Day 2: Conway, Will Young stunning, New Zealand in strong position!
NZ vs ENG 2nd Test, Day 2: Conway, Will Young stunning, New Zealand in strong position! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 11, 2021 • 10:59 PM

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயன 2ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டிக்கு நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 11, 2021 • 10:59 PM

இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. சிப்லி 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிராலே டக் அவுட்டானார். கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னிலும், ஒல்லி போப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் ரோரி பர்ன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 81 ரன்னில் வெளியேறினார்.

Trending

பின்பு பரிதாபமான நிலையில் இருந்த இங்கிலாந்தை லாரன்ஸ் சிறப்பாக விளையாடி மீட்டார். இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. லாரன்ஸ் 67 ரன்னுடனும், மார்க் வுட் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இங்கிலாந்து. அதில் லாரண்ஸ் - மார்க் வுட் ஜோடி சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்தனர். இதில் மார்க் வுட் 41 ரன்கள் சேர்த்தபோது ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த ஸ்டுவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் சொற்ப ரன்களில் அவுட்டாகினார். இதனால் இங்கிலாந்து 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் லாரண்ஸ் மட்டும் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்களையும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் டாம் லேதம் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த டேவன் கான்வே - வில் யங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவன் கான்வே 80 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதையடுத்து வில் யங்குடன் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் ராஸ் டெய்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத் தடுத்தார். 

இன்றைய நாளின் கடைசி ஓவரின் போது 82 ரன்கள் எடுத்திருந்த வில் யங், ஒல்லி போப் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 229 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் ராஸ் டெய்லர் 46 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement