NZ vs ENG, 2nd Test: 388 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 388 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் லாரன்ஸ், ரோரி பர்ன்ஸ் தலா 81 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே, வில் யங், ராஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி மூன்றாம் நாளான இன்று 388 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதில் வில் யங் அதிகபட்சமாக 82 ரன்களையும், டேவன் கான்வே, ராஸ் டெய்லர் தலா 80 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் மூலம் 85 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now