
New Zealand vs England 3rd Test Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் ஒயிட்வாஷ் செய்து அசத்தும். அதேசயம் ஒயிட்வாஷை தவிர்க்க நியூசிலாந்து அணியும் கடுமையாக போராடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
NZ vs ENG 3rd Test: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இங்கிலாந்து
- நேரம் - அதிகாலை 3:30 மணி (இந்திய நேரப்படி)
- இடம் - செடான் பார்க் மைதானம், ஹாமில்டன்