
நெதர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றது. டி20 போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடாத நிலையில் போட்டி நடக்கவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அந்த 32 ரன்கள் எடுப்பதற்க்குள் 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. லாதம்-கிராண்ட்ஹோம் சிறிது நேரம் தாக்குப்பித்தனர். 16 ரன்கள் எடுத்த நிலையில் கிராண்ட்ஹோம் அவுட் ஆனார். இதனையடுத்து லாதம்-வுடன் பிரேஷ்வேல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஒரு பக்கம் நிலைத்து ஆடிய லாதம் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.