
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக இழந்தது. இந்த தொடர் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.
அதன்படி நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால் அதற்கு தயாராவதற்கு இரு அணிகளும் இத்தொடரை பயன்படுத்திக்கொள்ளும். மேலும் பாகிஸ்தான் அணியை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி வழிநடத்தவுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
- இடம் - ஈடன் பார்க் மைதானம், ஆக்லாந்து
- நேரம் - காலை 11.40 மணி (இந்திய நேரப்படி)