
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் கேன் வில்லியம்சன், டெரில் மிட்செல், டிம் சௌதீ, பாபர் ஆசாம், ஷாஹின் அஃப்ரிடி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அசத்தியுள்ளதால் இப்போட்டியில் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
- இடம் - செடன் பார்க் மைதானம், ஹாமில்டன்
- நேரம் - காலை 11.40 மணி (இந்திய நேரப்படி)