
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 4ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 3 டி20 போட்டிகளின் முடிவிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது ஏற்கெனவே நியூசிலாந்து அணி தொடரை வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
- இடம் - ஹக்லி ஓவல் மைதானம், கிறிஸ்ட்சர்ச்
- நேரம் - காலை 11.40 மணி (இந்திய நேரப்படி)