Advertisement

நியூசிலாந்து vs பாகிஸ்தான், 5ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 20, 2024 • 22:20 PM
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 5ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 5ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டி20 போட்டிகளின் முடிவிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 4-0 என்ற கணக்கி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது ஏற்கெனவே  நியூசிலாந்து அணி தொடரை வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending


போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
  •     இடம் -  ஹக்லி ஓவல் மைதானம், கிறிஸ்ட்சர்ச்
  •     நேரம் - காலை 11.40 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரத்தில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 38
  •     நியூசிலாந்து -17
  •     பாகிஸ்தான் - 20
  •     முடிவில்லை - 01

பிட்ச் ரிப்போர்ட்

கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானம் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இங்கு பந்து பேட்டிற்கு வரும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் அதிக ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும். மேலும் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம். அதேசமயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி 180 முதல் 200 ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும்.

உத்தேச லெவன்

நியூசிலாந்து:  ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், ரச்சின் ரவீந்திரா, வில் யங், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர்(கே), ஆடம் மில்னே, டிம் சௌதி, மேட் ஹென்றி, லோக்கி ஃபர்குசன்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், ஹசீபுல்லா கான், பாபர் ஆசாம், ஃபகர் ஸமான், சாஹிப்ஸதா ஃபர்ஹான், இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி (கே), முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப், ஸமான் கான்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்: முகமது ரிஸ்வான்(துணைக்கேப்டன்), டிம் செய்ஃபெர்ட்
  •     பேட்டர்ஸ்: ஃபின் ஆலன்(கேப்டன்), வில் யங், கிளென் பிலீப்ஸ், பாபர் ஆசாம்,  ஃபகர் ஸமான்
  •     ஆல்-ரவுண்டர்கள்: மிட்செல் சாண்ட்னர், முகமது நவாஸ்
  •     பந்துவீச்சாளர்கள்: டிம் சௌதீ, ஸமான் கான்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement