Advertisement

நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மவுண்ட மௌங்கானுயில் நடைபெறவுள்ளது.

Advertisement
நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 03, 2024 • 05:40 PM

தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மவுண்ட் மௌங்கானுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, இத்தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி அறிமுக வீரர்களைக் கொண்ட அணியை இத்தொடருக்கு அனுப்பியுள்ளதால் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 03, 2024 • 05:40 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - பே ஓவல், மவுண்ட் மௌங்கானுய்
  • நேரம் - அதிகாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

பே ஓவல் மைதானம் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கத்தை செலுத்துவார்கள். அதேசமயம் பந்து பழையதாகும் போது சுழற்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் பேட்டர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது நல்ல ஸ்கோரை குவிக்க உதவும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 47
  • நியூசிலாந்து - 05
  • தென் ஆப்பிரிக்கா - 26
  • முடிவில்லை - 16

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: கீகன் பீட்டர்சன், ஜுபைர் ஹம்சா, க்ளைட் ஃபோர்டுயின், டேவிட் பெடிங்ஹாம், நீல் பிராண்ட் (கே), ரேனார்ட் வான் டோண்டர், டேன் பேட்டர்சன், ஷான் வான் பெர்க், மிஹ்லாலி மபோங்வானா, டுவான் ஆலிவியர், ஷேபோ மோரேகி.

நியூசிலாந்து: டெவான் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், டாம் பிளண்டல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், கைல் ஜேமிசன், டிம் சதீ (கே), நீல் வாக்னர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: டாம் லாதம்
  • பேட்டர்ஸ்: கேன் வில்லியம்சன் (துணை கேப்டன்), டெவான் கான்வே, கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம்
  • ஆல்-ரவுண்டர்கள்: டேரில் மிட்செல் (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, நீல் பிராண்ட்
  • பந்துவீச்சாளர்கள்: டிம் சௌதீ, டேன் பேட்டர்சன்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement