Advertisement

நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.

Advertisement
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 07, 2024 • 08:35 PM

ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்சில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதேபோல் இரு அணியும் சமபலம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 07, 2024 • 08:35 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச்
  • நேரம் - அதிகாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

கிறிஸ்ட்சர்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தின் ஆடுகளம் வீச்சாளர்களுக்கு ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மைதானத்தில் முதல் இரண்டு நாள்கள் பேட்டர்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் அதனை பயன்படுத்தி பேட்டர்கள் ஸ்கோரை குவிக்கலாம். இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 8 முறை முதலில் பந்துவீசிய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 291 ரன்களாக உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 62
  • நியூசிலாந்து - 08
  • ஆஸ்திரேலியா - 35
  • முடிவில்லை - 18

நேரலை

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.

நியூசிலாந்து: டாம் லாதம், வில் யங், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், கிளென் பிலிப்ஸ், ஸ்காட் குகெலிஜன், மாட் ஹென்றி, டிம் சவுத்தி (கே), வில் ஓ'ரூர்க்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டாம் ப்ளன்டெல்
  • பேட்ஸ்மேன்கள் - கேன் வில்லியம்சன் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, கேமரூன் கிரீன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லையன், பாட் கம்மின்ஸ், மேட் ஹென்றி.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement