
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீர்ர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் நடப்பு முத்தரப்பு தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் புள்ளிப்பட்டியளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதுமட்டுமின்றி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய இரண்டு டி20 போட்டியிலும் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய கையோடு அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.