
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு போட்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்த்தில் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் இரட்டை சதமடிமடித்ததன் மூலம், நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 580 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, டக் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.