 
                                                    New Zealand vs Sri Lanka 2nd ODI Dream11 Prediction: இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 08) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. மறுபக்கம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பியில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
NZ vs SL 2nd ODI: போட்டி தகவல்கள்
மோதும் அணிகள்: நியூசிலாந்து vs இலங்கை
நேரம்: ஜனவரி 05, அதிகாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
இடம்: செடான் பார்க் மைதானம், ஹாமில்டன்
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        