
New Zealand vs Sri Lanka 2nd T20I Dream11 Prediction: இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 30) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் இலங்கை அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் தொடரையும் சமன்செய்யும் முனையில் விளையாடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
NZ vs SL 2nd T20I: போட்டி தகவல்கள்
மோதும் அணிகள்: நியூசிலாந்து vs இலங்கை
நேரம்: டிசம்பர் 30, காலை 11.30 மணி (இந்திய நேரப்படி)
இடம்: பே ஓவல் மைதானம், மவுண்ட் மவுங்கானுய்