
Sophie Devine Retirement: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக நியூசிலாந்து கேப்டன் சோஃபி டெவின் அறிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் இலங்கையில் உள்ள கொழும்புவிலும் சில போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டி அட்டவணையையும் ஐசிசி நேற்றைய தினம் வெளியிட்டது. அதன்படி பெங்களூருவில் நடைபெறும் முதல் போட்டியில் தொடரை நடத்தும் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேசமயம் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 5ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.