
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன மூன்றாவது டி20 போட்டியானது வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெர்றது. இப்போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு பெத் மூனி மற்றும் ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் பெத் மூனி 21 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜ்ஜியா வோல் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 26 ரன்களிலும், ஜார்ஜியா வோல் 75 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் எல்லி பெர்ரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ரோஸ்மெரி மைர், சோஃபி டிவைன், அமெலியா கெர், சூஸி பேட்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.