
இங்கிலாந்து மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இங்கிலாந்து மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஓருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - பெர்னண்டைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் பெர்னண்டைன் 35 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான சூஸி பேட்ஸ் அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் அமெலியா கெர், பிலிம்மெர், மேடி க்ரீன் உள்ளிட்ட வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து.