
'Old McDonald Had A Farm, Virat Kohli Has Lost His Form' (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட்டை தனது பேட்டையாக மாற்றி, அதில் பேட் கொண்டு ஆட்சி செய்து வரும் அரசன் தான் இந்திய வீரர் விராட் கோலி. ஒருநாள், டி20, டெஸ்ட் என இந்தியாவுக்காக மொத்தம் 23,650 ரன்கள் எடுத்துள்ளார். அது தவிர ஐபிஎல் களத்தில் 6499 ரன்கள் சேர்த்துள்ளார். தனியொரு பேட்ஸ்மேன் பதிவு செய்த அதிகபட்ச ரன்கள் இது.
அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனைகளுக்கான மைல் கற்களாக மாற்றி அமைப்பவர். நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.
இந்நிலையில், அவரை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அவருக்கு ஆதரவாகவும், அவரது ஆட்டத்தை விமர்சித்தும் வருகின்றனர். '