IND vs ENG: அணியில் இடம்பிடித்த சர்ச்சை நாயகன்!
இந்திய அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் விளையாடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக கவுண்டி லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணி இன்னும் ஒருசில நாள்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
இதற்கிடையில் கடந்த நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒல்லி ராபின்சன், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தின் காரணமாக கிரிக்கெட்டில் விளையாட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவர் தற்போது இந்திய அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியில் விளையாடுவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன்னை தேர்வு செய்யவுள்ளோம். ஏனெனில் நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அவர் தனது திறனை வெளிப்படுத்தினார்.
அவர் மேலும் இங்கிலாந்து அணிக்காக பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காக இம்முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். அதன்படி இந்திய அணிக்கேதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அபாச கருத்து தெரிவித்த சர்ச்சையில் சிக்கியுள்ள ராபின்சன்னிற்கு 8 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்படி நியூசிலாந்து மற்றும் கவுண்டி போட்டிகளிலிருந்து ராபின்சன் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now