
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தி்ல ஆர்சிபி அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியை தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 19.3 ஓவர்களில் 115 ரன்களில் சுருட்டி 29 ரன்களில் ராஜஸ்தான் வென்றது.
ராஜஸ்தான் அணி இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில்நீட்கிறது, ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வழக்கமான அதிரடி வீரர் ஜாஸ் பட்லர்(8), படிக்கல்(7) ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தனர். ஒன்டவுனில் களமிறக்கப்பட்ட ரவிச்சந்திர அஸ்வின் அதிரடியாக ஆடி 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் மறுமுனையில் ரியான் பராக் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, 31 பந்துகளில் 56 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பீல்டிடிங்கிலும் கலக்கிய ரியான் பராக் 4 கேட்சுகளை பிடித்து அசத்தியால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.