
ஐபிஎல் 16ஆவது சீசனில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே 12 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் 41 வயதான கேப்டன் மகேந்திர சிங் தோனி மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு இமாலய சிக்சர்களும் அடங்கும். தோனி அடித்த இரண்டு சிக்சர் தான் கடைசியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
சிஎஸ்கே அதே 12 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. தோனி அடித்த வேக பந்துவீச்சாளர் மார்க் வுட் நல்ல பார்மில் இருக்கிறார். முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை சாய்த்த மார்க் வுட் சிஎஸ்கேவுக்கு எதிராகவும் நன்றாகத்தான் பந்து வீசினார். ஆனால் தோனியின் திறமை அவருடைய பந்துவீச்சைசுக்கு நூறாக உடைத்தது. இந்த சம்பவம் நடந்து 48 மணி நேரம் ஆகியும் அவர் இன்னும் தோனி அடித்த சிக்சரில் இருந்து மீளாமல் இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், “கேஎல் ராகுலும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் அமைதியாக இருந்து யுக்திகளை எப்படி கையாண்டு தோனியை ஆட்டம் இழக்க வைப்பது என பேசிக்கொண்டு இருந்தோம். என் மனதில் நான் ரன்களை கட்டுப்படுத்த தற்காப்பு முறையில் பந்து வீசக்கூடாது என நினைத்தேன். தோனியை எப்படி நெருக்கடிக்கு ஆளாக்கி அவரை ஆட்டமிழக்க வைப்பது என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன்.