
ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் மும்பை அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த 5 முறையும் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய மேட்ச் வின்னர் ஆல்ரவுண்டர் கீரே பொல்லார்டு.
ஐபிஎல்லில் ஒரே அணிக்காக விளையாடிய வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்து உள்ளவர் கீரேன் பொல்லார்ட் தான். 2010ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை 13 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள பொல்லார்டு, மும்பை இந்தியன்ஸை தவிர ஐபிஎல்லில் வேறு அணிக்கு ஆடியதேயில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 189 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3,412 ரன்களும்; 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, மும்பை அணி 5 முறை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த மேட்ச் வின்னர் பொல்லார்டு.