Advertisement

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் மிட்செல் ஸ்டார்க்?

அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நீண்ட காலம் உள்ளதால், என்னால் அதனை தொடர முடியுமா என்பது தெரியவில்லை என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

Advertisement
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் மிட்செல் ஸ்டார்க்?
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் மிட்செல் ஸ்டார்க்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 27, 2024 • 10:04 PM

 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 27, 2024 • 10:04 PM

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.  இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. 

Trending

மேலும் இந்த இறுதிப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். முன்னதாக ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கிய மிட்செல் ஸ்டார்க், தொடரின் இறுதிக்கட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நான் ஏதெனும் ஒரு கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று ஸ்டார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 9 ஆண்டுகளாக நான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுத்து வந்தேன். இதற்காக என்னுடைய உடலுக்கு ஓய்வு கொடுக்கவும், மனைவியுடன் நேரத்தை செலழிக்கவும் எனக்கு நானே வாய்ப்பு கொடுத்துக் கொண்டேன்.

மேலும் நாட்டிற்காக விளையாட, பிறநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதை தவிர்த்தேன். இந்நிலையில் நான் தற்போது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தை விட முடிவு கட்டத்தில் உள்ளேன். ஒரு விடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற எண்ணம் உள்ளது. அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு நீண்ட காலம் உள்ளதால், என்னால் அதில் தொடர்ச்சியாக விளையாட முடியுமா எனது தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement