
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் விளையாடவுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில், ஒரு மோசமான ஆட்டம் ஒருபோதும் உங்களை நல்ல அல்லது கெட்ட அணியாக மாற்றாது என்று இந்திய வீராங்கனை டைடாஸ் சாது தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இது ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் எனது டி20 அறிமுகத்திலிருந்து ஒரு நாள் அறிமுகம் வரை எனக்கு நீண்ட காத்திருப்பு இருந்தது, ஆனால் அது ஒரு அற்புதமான உணர்வு.