
இந்தியா -நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி ஆரம்பித்த நாளிலிருந்தே மழை பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்னதாகவே முடிக்கப்பட்டது.
அதேபோல் நேற்று நடைபெற இருந்த நான்காவது நாள் ஆட்டமும் மழையால் தடைப்பட்டது. இது இப்படியே தொடர்ந்தால், இரு அணிகளும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதுவரை 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. இதில் இந்திய அணி தரப்பில் அஸ்வினும், இஷாந்த் ஷர்மாவும் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.