அறிமுக போட்டியில் சாதனை படைத்த வில்லியம் ஓ ரூர்க்!
நியூசிலாந்துக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை வில்லியம் ஓ ரூர்க் படைத்துள்ளார்.
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களையும், அதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களிலும் என ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 31 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் பெட்டிங்ஹாம் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் அணியின் மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்காததால் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 235 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
இதனால் நியூசிலாந்து அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டெவான் கான்வே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்துள்ளது. இதில் டாம் லேதம் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதையடுத்து 227 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை நியூசிலாந்து தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய வில்லியம் ஓ ருர்க் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் என இப்போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இதன்மூலம் நியூசிலாந்துக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை வில்லியம் ஓ ரூர்க் படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட்டில் அறிமுக வீரராக மார்க் கிரேக் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இந்நிலையில் அச்சாதனையை முறியடித்து வில்லியம் ஓ ரூர்க் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now