
ராபின் உத்தப்பா கடந்த 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். முன்னதாக சேலஞ்சர்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பி அணிக்காக அவர் விளையாடிய விதம் தேர்வு குழு உறுப்பினர்களை வெகுவாக ஈர்த்தது. இதனை தொடர்ந்தே அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உத்தப்பா தற்போது ஐபில் -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதிரடி ஆட்டத்துக்கு பெயர்போன உத்தப்பாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பெங்களூருவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான ஷீதால் கவுதம் என்பவரை ராபின் உத்தப்பா கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் (நீல் நோலன் உத்தப்பா) இருக்கிறார். இந்நிலையில், தங்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக ராபின் உத்தப்பா - ஷீதால் கவுதம் தம்பதியினர் அறிவித்துள்ளனர்.