வெங்கடேஷ் ஐயருக்காக மிகவும் வருத்தப்படுகிறேன் - நிதிஷ் ராணா!
பந்துவீச்சு பிரிவு இன்னும் சிறப்பான செயல்பாட்டை தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஓரிரு போட்டிகள் என்றால் பரவாயில்லை ஆனால் ஐந்து போட்டிகளாக தொடர்ந்து இதேதான் நடக்கிறது என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து மொத்தம் 51 பந்துகளில் 14 ரன்கள் குவித்து சிறப்பான பங்களிப்பை தந்தார்.
Trending
அதைத்தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 17.4 ஓவரில் இலக்கை அனாயசமாக எட்டி கொல்கத்தா அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது. மும்பை அணி பவர் பிளேவில் 72 ரன்களை குவித்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இப்போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா, “நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். இதற்கு கடைசி நேரத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசிய பியூஸ் சாவ்லா அவர்களுக்குத்தான் இந்த அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும். நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள்.
மும்பையில் பகல் நேர போட்டியில் நீங்கள் சதமும் எடுக்கிறீர்கள். ஆனால் உங்கள் அணி வெல்லவில்லை. உண்மையில் நான் வெங்கடேஷ் ஐயருக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். நமது சிறந்த பந்துவீச்சாளர்கள் ரன்களை அதிகம் தருகிறார்கள் என்றால் அதைப் பற்றி என்ன சொல்வது? நரைனுக்கு எதிராக இஷான் விளையாடியது. நாங்கள் பவர் பிளேவில் நன்றாக பந்துவீசி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எனது பந்துவீச்சு பிரிவு இன்னும் சிறப்பான செயல்பாட்டை தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஓரிரு போட்டிகள் என்றால் பரவாயில்லை ஆனால் ஐந்து போட்டிகளாக தொடர்ந்து இதேதான் நடக்கிறது. இது மிகவும் ஒரு வலி கொடுக்கும் செயல். ஆனால் நாங்கள் இதைப் பற்றி பேசுவோம் நாங்கள் மீண்டு வருவோம் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now