
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் ஆடவர் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியியில் சதர்ன் பிரேவ் மற்றும் ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஓவல் அணியில் டேவிட் மாலன் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த வில் ஜேக்ஸ் - சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் ஜேக்ஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சாம் கரணும் 25 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சாம் பில்லிங்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், டோனவன் ஃபெரீரா 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, ஜோர்டன் காக்ஸ் 25 ரன்களிலும், டாம் கரண் 24 ரன்களையும் சேர்க்க ஓவல்ல் இன்விசிபில் அணியானது இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் அகீல் ஹோசைன் மற்றும் தைமல் மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணிக்கு அலெக்ஸ் டேவிஸ் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் டேவிஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸும் 24 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஜேம்ஸ் கோலஸ் 4 ரன்களிலும், லூயிஸ் டு ப்ளூய் 20 ரன்களிலும், கீரன் பொல்லார்ட் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.