
Paarl Royals registered a much-needed win for their SA20 campaign! (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் வெய்ன் பார்னெல் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணியில் வில் ஜேக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - தியூனிஸ் டி ப்ரூயின் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் குசால் மெண்டீஸ் 26 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரைலி ரூஸோவ் 19, டேட்ஸ்வெல் 2 என விக்கெட்டுகளை இழந்தனர்.