IND vs BAN: இன்று இந்தியா வந்தடையும் வங்கதேச அணி
இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று இந்தியா வந்தடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இப்போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
Trending
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த டெஸ்ட் தொடருக்கான வங்கதேச கிரிக்கெட் அணியும் இன்றைய தினம் சென்னை வந்தடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு நாளை முதல் வங்கதேச அணியும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்விக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்போடு உள்ளனர். அதேசமயம் வங்கதேச அணியானது சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியதுடன், இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளதால் இத்தொடரிலும் அந்த அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.
Win Big, Make Your Cricket Tales Now