
Pacer Pankaj Singh retires from all forms of cricket (Image Source: Google)
இந்திய அணியின் முன்னாள் வீரரும், ராஜஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளருமாக திகழ்ந்தவர் பங்கச் சிங்.
இவர் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகள், ஒரு ஒருநாள் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 17 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
மேலும் 2004ஆம் ஆண்டு முதல் முதல் 117 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 472 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது 36 வயதாகும் பங்கச் சிங், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.