
பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 1998ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக பாகிஸ்தானில் பயணம் செய்து ஆடுவதால் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரையும் விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இறுதியாக உணவு இடைவேளைக்கு 2 ஓவர் இருந்த நிலையில் அப்துல்லா ஷபீக் நாதன் லயன் பந்து வீச்சில் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.