
PAK vs AUS, 1st test (DAY 1 Lunch): Abdullah Shafique will be disappointed to have thrown his wicket (Image Source: Google)
பாகிஸ்தன் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் இன்று தொடங்கியது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்ததார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷஃபிக் இணை பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாம் உல் ஹக் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்துல்லா ஷஃபிக் 44 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.