
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரை 7 ரன்னில் வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி, லபுஷேனை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கினார்.
8 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடிய உஸ்மான் கவாஜா அரைசதம் அடிக்க, அவரைத்தொடர்ந்து ஸ்மித்தும் அரைசதம் அடித்தார். ஸ்மித் 59 ரன்களில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய உஸ்மான் கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.