
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஆப்துல்லா ஷஃபிக், கேப்டன் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் அரைசதம் கடந்திருந்த சைம் அயூப் 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் - முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது சதங்களையும் பதிவு செய்ததுடன் 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌத் ஷகீல் விக்கெட்டை இழக்க, அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த முகமது ரிஸ்வான் 171 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதமூலம் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அனியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்திருந்தது.