Advertisement

பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 30, 2025 • 01:01 PM

Pakistan vs Bangladesh 2nd T20I Dream11 Prediction: வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 30, 2025 • 01:01 PM

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இந்த போட்டியிலும் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரையும் கைப்பற்றும். மறுபக்கம் வங்கதேச அணி தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

PAK vs BAN 2nd T20I Match Details

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம்- மே 30, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

Gaddafi Stadium, Lahore Pitch Report

இந்த போட்டி லாகூஉர் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 30 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 19 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 11 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 163 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 209 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

PAK vs BAN Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 20
  • பாகிஸ்தான் - 17
  • வங்கதேசம் - 03

PAK vs BAN 2nd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - லிட்டன் தாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபகார் ஜமான் (துணை கேப்டன்), சைம் அயூப், ஹசன் நவாஸ், தன்ஸித் ஹசன்
  • ஆல்-ரவுண்டர்கள் - மெஹ்தி ஹசன், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான்
  • பந்துவீச்சாளர்கள் - ரிஷாத் ஹொசைன், ஹசன் மஹ்மூத், ஹசன்  அலி

PAK vs BAN Predicted Playing 11

Pakistan Probable XI :ஃபகார் ஜமான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், ஷதாப் கான், குஷ்தில் ஷா, ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது

Bangladesh Probable XI : தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், மஹேதி ஹசன், ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம்

PAK vs BAN Dream11 Prediction, PAK vs BAN, PAK vs BAN 2nd T20I Dream11 Team, Fantasy Cricket Tips, PAK vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Pakistan vs Bangladesh

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement