PAK vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ப்ரூக் அதிரடி; இங்கிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஜோடி முகமது ரிஸ்வான் -பாபர் ஆசம் ஜோடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளம் அமைத்தது.
Trending
முகமது ரிஸ்வான் 68 ரன்களும், பாபர் அசாம் 31 ரன்களும் சேர்த்தனர். இப்திகார் அகமது 28 ரன்கள், ஹைதர் அலி 11 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் லூக் வுட் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 10 ரன்னிலும், டேவிட் மாலன் 20 ரன்களிலும், பென் டக்கெட் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஆனாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் கிட்டத்திட்ட 42 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 53 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹாரிஸ் ராவூஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 25 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 19.2 ஓவர்கலில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now