Advertisement

PAK vs ENG, 1st Test: பாக்கிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரட்டும் கிரௌலி, டங்கெட் இணை!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 174 ரன்களைச் சேர்த்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 01, 2022 • 13:11 PM
PAK vs ENG, 1st Test: A fantastic first session for England!
PAK vs ENG, 1st Test: A fantastic first session for England! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படிம் 15ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

Trending


அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை முதல் ஓவர் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அதிலும் நசீம் ஷா வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 14 ரன்களை விளாசி அசத்தினர்.

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த அணி வெறும் 8.3 ஓவர்களில் 50 ரன்களையும், 14 ஓவர்களில் 100 ரன்களையும் கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போட்டியைப் போன்று விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. 

இதில் தொடர்ந்து அபாரமாக விளையடிய ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 150 ரன்களை கடந்தது. இதன்மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ஓவர்களில் 174 ரன்களை குவித்துள்ளது.

இதில் ஸாக் கிரௌலி 91 ரன்களைச் சேர்த்து சதத்தை நெருங்கியுள்ளார். மற்றோரு வீரரான பென் டக்கெட் 77 ரன்களுடன் சதமடிக்க காத்திருக்கிறார். இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் திணறிவருவது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement