
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்துள்ளார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
அதேசமயம் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய சைம் அயூப் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து அப்துல்லா ஷஃபிக்குடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்து முயற்சியில் இறங்கினார். இவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசினர்.