
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்க்கும் நிலையில், கராச்சியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்வானும் பாபர் அசாமும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 11.5 ஓவரில் 97 ரன்களை சேர்த்தனர். பாபர் ஆசாம் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் அடி நொறுக்கி நல்ல ஸ்கோர் செய்துவரும் முகமது ரிஸ்வான், இந்த போட்டியிலும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் சதமடிக்கும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டார். ஆசிய கோப்பையில் 281 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த வீரராக அந்த தொடரை முடித்தார் ரிஸ்வான்.