
PAK vs ENG, 4th T20I: Rizwan makes 88 as Pakistan post decent total on board (Image Source: Google)
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பாபர் ஆசாம் 36 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, மறுமுனையிலிருந்த ரிஸ்வான் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 88 ரன்களில் ரிஸ்வான் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷான் மசூத் 21, குஷ்டில் ஷா 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய ஆசிஃப் அலி சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார்.