PAK vs ENG, 7th T20I: மாலன், ப்ரூக் அதிரடி; பாகிஸ்தானுக்கு கடின இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான 7ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளைப் பெற்று சமனிலையுடன் உள்ளன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று லாகூரில் நடைபெற்று வருகிறது.
Trending
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
பின் 18 ரன்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த பிலிப் சால்ட்டும் 20 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - பென் டக்கெட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மாலன் அரைசதம் கடந்து அசத்த, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 19 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்து ரன் அவுட்டாகினார். அவரைத் தொடர்ந்து வந்த ஹாரி ப்ரூக்கும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மாலன் 78 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 46 ரன்களையும் சேர்த்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now