
Pakistan vs England 2nd Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நாடைபெறவுள்ளது இதில் பாகிஸ்தான் அணியானது ஏற்கனவே முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியோ அபார வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்று. அதேசமௌஅ, பாகிஸ்தான் அணியானது தொடரை இழக்காமல் இருக்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
PAK vs ENG 2nd Test: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
- இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
- நேரம் - அக்.15 காலை 10.30 மணி (இந்திய நேரப்படி)